Connect with us

காலையிலிருந்து வராத அதிமுக கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்போடு வந்து பதவியேற்பு!

Two Leaves

Tamil Nadu

காலையிலிருந்து வராத அதிமுக கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்போடு வந்து பதவியேற்பு!

காலையிலிருந்து வராத அதிமுக கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்போடு வந்து பதவியேற்பு!

இன்று காலை முதலே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில இடங்களில் மட்டும் பதவியேற்க கவுன்சிலர்கள் மறுத்துள்ளனர்.

அதுவும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் பேரூராட்சியில் அதிமுகவினர் பதவி ஏற்க மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே பதவி ஏற்றனர்.

காலையிலிருந்து அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் பதவியேற்க வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தற்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவி ஏற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பதவியேற்றுள்ளனர். அன்னவாசல் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பதவி ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக திமுக கவுன்சிலர்கள் 5 பேரும் காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் பதவியேற்றுக் கொண்டனர். சுயேச்சை கவுன்சிலரை மிரட்டி அதிமுகவினர் கடத்தி செல்வதாக குற்றம்சாட்டி அன்னவாசலில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top