பொறுப்பேற்ற சில மணிநேரத்திலேயே திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்!
இன்று காலை முதலே தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அதுவும் குறிப்பாக புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுகவினர் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவியேற்பு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொளப்பலூர் பேரூராட்சியின் அதிமுகவினர் பதவி ஏற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் தான் பதவியேற்றவுடன் திமுகவில் இணைந்து கட்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி 14 வது வார்டில் வென்ற அதிமுக கவுன்சிலர் கஸ்தூரி கலியபெருமாள் திமுகவில் இணைந்தார்.
கவுன்சிலராக பொறுப்பேற்ற சில மணி நேரத்திலேயே திமுகவில் இணைந்தார் அதிமுக கவுன்சிலர் கஸ்தூரி கலியபெருமாள். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கஸ்தூரி கலியபெருமாள். நாளை மறுநாள் மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
