Connect with us

வெற்றி பெற்ற சில நொடிகளில் திமுகவுடன் இணைந்த அதிமுக கவுன்சிலர்!!!

xdmk aiadmk 1533716269.jpg.pagespeed.ic .14OpghHkTi

தமிழகம்

வெற்றி பெற்ற சில நொடிகளில் திமுகவுடன் இணைந்த அதிமுக கவுன்சிலர்!!!

வெற்றி பெற்ற சில நொடிகளில் திமுகவுடன் இணைந்த அதிமுக கவுன்சிலர்!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது  கடந்த 19-ம் தேதி நடைபெற்றது . இதில்  12838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான  வாக்குப்பதிவு அமைதியான முறையில்  நடந்து முடிந்தது.

அந்த வகையில்  நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகள் போன்ற பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகுத்து  வெற்றி வாகையை சூடியுள்ளது.

இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் அதிமுக சார்பில் அருண் சுந்தர பிரபு என்பவர் போட்டியிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

இதனிடையே வெற்றிப்பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றி அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனால்  பெரும்பாலான  இடங்களில் தோல்வியை கண்டுள்ள அதிமுக, தற்போது வெற்றிப்பெற்று திமுகவில் இணைந்துள்ளதால் அதிமுகவின் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top