Connect with us

அதிமுகவின் முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி!

corona

தமிழகம்

அதிமுகவின் முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் பொதுக்குழு கூட்டத்திலும் கூட கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் போனதாக தெரிகிறது. மேலும், பொதுமக்களை தாண்டி தற்போது அரசியல்வாதிகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top