கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போழுது பாஜக -வை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தற்போழுது அறிவித்தார். புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசனை கட்சி அறிவித்தது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் பாஜக -வை எதிர்த்து அதிமுக களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போழுது தனித்து களமிறங்கும் அதிமுக பாஜக -வை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறது. கர்நாடகாவில் இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவிய வருகிறது.
இந்த நிலையில் தான் தற்ப்பொழுது அதிமுகவும் பாஜக கூட்டணியை தவிர்த்து தனியாக களமிறங்க முடிவெடுத்துள்ளது, கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக உள்ள புலிகேசி நகரில் அதிமுக சார்பில் டி.அன்பரசன் போட்டியிடயுள்ளதாக அதிமுக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் டி.அன்பரசன் என்பவர் கர்நாடகா மாநிலத்தின் அதிமுக அவைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக புலிகேசி நகர் தொகுதியில் இரண்டு லட்சத்து ஆறுபதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் வாழ்ந்து வருகின்றனர் .
அதிலும் 1லட்சத்தி 10 ஆயிரம் பேர் இசுலாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் இந்த தொகுதியில் 60 சதவீதம் பேர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும்.
உதயநிதி ஒரு விளையாட்டு பிள்ளை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
மேலும் 2018 ஆம் ஆண்டில், இத்தொகுதியில் காங்கிரஸின் ஆர் அகண்ட சீனிவாசமூர்த்தி 81,626 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) பி பிரசன்னகுமாரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.