Connect with us

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்: கன்னியாகுமரி தொகுதி யாருக்கு?

News

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்: கன்னியாகுமரி தொகுதி யாருக்கு?

ab4c83ba280534660d21a52b195273cf

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் தொகுதி பங்கீடு குறித்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

0c1b560d9eae920e32d3112f1635c3f4

இது குறித்த ஒப்பந்தத்தில் அதிமுகவின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களும், பாஜக சார்பில் எல் முருகன் மற்றும் சிடி ரவி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து ஆலோசனை செய்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் அந்த தொகுதியில் மீண்டும் பொன்ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top