Connect with us

அதிமுக வழக்குகள்.. உயர் நீதிமன்றம் கண்டனம்!!

உயர்நீதிமன்றம்

தமிழகம்

அதிமுக வழக்குகள்.. உயர் நீதிமன்றம் கண்டனம்!!

அதிமுக தொடர்பாக அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்தும், 2021-ம் ஆண்டு செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட கட்சி விதிகளில் திருத்தம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் குறித்து வழக்குகள் தொடர்ந்து இருப்பதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டி ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு தாக்கல் செய்துள்ளன.

குறிப்பாக ஒரே கோரிக்கைகளை முன்வைத்து பல வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதாகவும், இதனால் அதிமுக தொடர்பான விவகாரங்களை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைவிடப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி அதிமுக வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென்று கடிதம் கொடுப்பது வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதி கிருஷ்ணா ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top