அதிகாலை அதிமுக வேட்பாளர் தூக்குபோட்டு தற்கொலை! என்னவாக இருக்குமோவென்று போலீசார் விசாரணை!!
தமிழகத்தில் தேர்தல் நேரம் நெருங்கி விட்டது. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. ஏனென்றால் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆங்காங்கே ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பல வார்டுகளில் ஆளும்கட்சி நேரடியாக எதிர்க்கட்சியிடம் போட்டியிடுகிறது. தேர்தல் நடப்பதற்கு முன்பே ஒரு சில வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள். இவ்வாறு தேர்தல் களம் அதிதீவிரமாக சூடு பிடித்துவிட்டது.
இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவர் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை புரிந்து வருகின்றனர்.
