அதிமுக உட்கட்சி தேர்தல்: இபிஎஸ், ஓபிஎஸ் தடாலடி பதில்!!

அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து ராம்குமார், ஆதித்தன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவியை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக அதிமுக கட்சியில் இரட்டை தலைமையை விரும்பவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுதாரர் இருவரும் கட்சியின் உறுப்பினர் அல்ல என தெரிவித்தனர்.

அதோடு இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை என தெரிவித்தனர். அதிமுகவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தக்கூடிய நோக்கில் சில தனிநபர்கள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்கி 2017- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த 2017- ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் கட்சியின் வேட்பாளர்களை அங்கீகரித்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தாங்கள் கையெழுத்திட்டு விண்ணப்பங்கள் வழங்கியுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment