ஒருங்கிணைப்பாளர்களால், ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தேதியை அறிவித்த அதிமுக!

நம் தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக காணப்படுகிறது அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்த அதிமுக கட்சியில் சில நாட்களாக குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக அதிமுகவின் பொன்விழாவிற்கு பின்பு அதிமுக ஆட்சியில் மிகுந்த குழப்பம் நிலவுகிறது.

அதிமுக

தற்போது வரை அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் மத்தியில் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் சசிகலா என்று சசிகலாவின் தொண்டர்கள் கோஷமிட்டனர்.

நேற்றைய தினம் அதிமுக கட்சியின் சார்பில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். ஏனென்றால் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவிற்குப் பின்னர் அந்த பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று பன்னீர்செல்வம்-பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். அதற்கான வேட்புமனுக்களை டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஐந்தாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏழாம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் பழனிச்சாமி- பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment