இடைத்தேர்தலில் ‘அதிமுக தனித்தே களம்’!!-முன்னாள் அமைச்சர் பரபரப்பு;

இன்னும் சில நாட்களில் ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதரக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் இருந்து யார் போட்டியிடுவார்? என்றும் கூட்டணி எதுவும் இருக்குமா? என்றும் கேள்விகள் எழுதிக் கொண்டு வருகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் தகவல் பரவிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அறிவிக்காமல் மௌனம் காத்துக் கொண்டு வருகிறது பாஜக.

கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் 98.5% பேர் ஒரே அணியில் தான் இருக்கிறோம் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் முடிவு தெரியும் என்று செங்கோட்டையன் கருத்து கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.