அகமத் நகர் ஐ.சி.யூவில்  தீ விபத்து: 11 பேர் பலி! 5 லட்சம் நிவாரண உதவி!!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் ஏராளமான அரசு மருத்துவமனைகள் காணப்படுகிறது. இவை ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைகிறது. அதோடு மட்டுமில்லாமல் பல அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு காணப்பட்டுள்ளது.

அகமத் நகர்

ஆனால் அப்போது அரசு மருத்துவமனையில் திடீர் விபத்துகள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அகமத் நகர்

ஐசியூவில்  ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் பதினோரு பேர் கருகியும் மூச்சு திணறியும் உயிர் இழந்தனர். 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சத்தில் உள்ளனர்.

உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்க மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தரவும் மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment