இன்று வேளாண் பட்ஜெட்… ஆவலுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெடை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பிற்காக “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டம், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு என பல அறிவிப்புகள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் துறையில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் வெளியாகும் என விவசாயிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment