தாலிக்கு தங்கம்? வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம்..! எடப்பாடி பகீர் பேட்டி;
இன்றைய தினம் காலை நம் தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழகத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் டிஜிட்டல் விவசாயம், பயிர் கடன் தள்ளுபடி, பனை மர சாகுபடி, உணவு பூங்கா உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் இல்லை என்று அதிமுகவினர் செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். வேளாண் பட்ஜெட்டில் கொள்கை விளக்க குறிப்பு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்தார்.
அம்மா ஆட்சியில் இருக்கும் போது கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டதக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்தால் தான் பெரிய பெரிய திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
ஆனால் இந்த வேளாண் பட்ஜெட் உண்மையிலேயே விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக காணப்படுகிறது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
