Connect with us

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்!: பிரியங்கா காந்தி;

agriculture loans

News

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்!: பிரியங்கா காந்தி;

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்!: பிரியங்கா காந்தி;

தமிழக அளவில் இந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதே வேளையில் இந்திய அளவில் இந்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை குறி வைத்து பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில் தேர்தல் அறிக்கையும் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி விவசாய கடன் பற்றி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யப்படும் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், கோவிட் பாதித்த குடும்பங்களுக்கு தலா 25,000 வழங்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top