இனி வீண் அலைச்சல் வேண்டாம், வீடு தேடிவரும் விவசாயக்கடன்…

ஓசூரில் தனியார் வங்கி மூலம் விவசாயிகளுக்கு இருப்பிடத்திற்கு சென்று உடனடி கடன் வழங்கும் திட்டம் அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் வங்கி மூலம் சிறு விவசாயிகளுக்கு இருப்பிடம் சென்று நேரடி உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி உள்ளனர் இதனால் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஓசூரில் உள்ள தனியார் வங்கி (பெடரல் பேங்)சிறு விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று செல் போன் சேவை மூலம் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்,

குறிப்பாக விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவது மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இருப்பிடத்திற்கு சென்று செல்போன் செயலி மூலம் உடனடியாக ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்

இதற்கு தேவையான ஆவணங்கள் விவசாயிகளிடம் சிட்டா, ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இரண்டு நிமிடத்தில் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் சென்றடையும் எனவும் தெரிவித்தனர்,

இதற்கு வருடத்திற்கு நான்கு சதவீதம் மட்டும் வட்டி வசூலிக்கப்படுகிறது  எனவும் தெரிவித்தனர், இது போல் இன்று நல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் என்பவருக்கு உடனடியாக ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது அதற்கு அவர் வங்கிக்கு நன்றியை தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment