தமிழ்நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட விவசாய நிலத்தை நிலக்கரி இருப்பு ஏலத்துக்கு கோரப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் மத்திய நாடாளுமன்ற நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம், 2020ஐ, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றியது.
மாநிலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதைத் தடை செய்கிறது.
நிலக்கரி / லிக்னைட் விற்பனைக்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான டெண்டரை மார்ச் 29 அன்று அமைச்சகம் வெளியிட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வரும் சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி கிழக்கு பகுதிகளில் உள்ள நிலக்கரி இருப்புக்களை ஏலம் விட டெண்டர் ஆவணம் கோரப்பட்டது.
சென்னையில் பரபரப்பு; கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி!
சமீபத்தில் வெளியான நிலக்கரி ஏல டெண்டரில் இருந்து எடுக்கப்பட்ட 3 பிளாக்குகளை நீக்க வேண்டும்’ என மனுவில் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.