‘பத்து வருஷமா கத்திப்பார்க்குறாங்க’… எடுத்த எடுப்பிலேயே பாமகவை சீண்டிய அமைச்சர்!

இன்றைய சட்டப்பேரவையில் பாமகவை சீண்டும் வகையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

இன்று பேரவையில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்கள் நிழல் பட்ஜெட், நிழல் பட்ஜெட் என்று பல வருடங்களாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிழலையும் பார்க்கவில்லை, ஒன்றும் பார்க்கவில்லை. யாரும் பார்க்கக்கூட மாட்டேன் என்று விட்டார்கள்.

பத்து ஆண்டுகாலமாக அவரும், ஜி.கே.மணி அவர்களும் கத்திப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் நிழல் பட்ஜெட்டிலும் நம்முடைய முதல்வர் அவர்கள்தான் அதனைச் செய்தார்கள். எதிரணியில் இருந்தாலும், அவர்களின் கருத்துகளை மதிக்கப்படுகின்றன.

அந்த அளவிற்கு இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு விவசாயியும், தான் என்னென்ன விளைவிக்கிறாரோ, அந்த விவசாயத்திற்குச் சார்ந்த திட்டங்கள் வந்திருக்கின்றன. அதுதான் பாராட்டக்கூடியதாகும், பாராட்டுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பாமக சார்பில் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment