அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!

மே 4 திங்கட்கிழமையான நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. இது மே 29 வரை தொடரும். அக்னி நட்சத்திரமென்றாலே கொளுத்தும் வெயில் நினைவுக்கு வந்து நம்மை பயமுறுத்தும். சுப விசேசங்கள் எதுவும் நடைபெறாது.. வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் தாக்கம் அதிகமாய் இருக்கும் என வழக்கம்போல் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை என புராணங்கள் சொல்லும் கதையை பார்ப்போம்.

புராண காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.  யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யை அதிகமாக உண்ட அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கி விட்டது. அந்த நோய் நீங்குவதற்கு மூலிகை செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை 21 நாட்கள் எரித்த காலமே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

உச்சத்தில் சூரியன் இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்… மகாபாரதத்தில் இது குறித்து கிளைக்கதை ஒன்று உள்ளது. காண்டவ வனம் யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. அந்தக் காட்டிற்குள் நிறைய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். அந்த வனம் இந்திரனின் காவலில் இருந்தது. அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழை பெய்ய வைத்தான் மழையின் அதிபதியான இந்திரன். காண்டவ வனத்தை எரித்து மூலிகைகளை கபளீகரம் செய்தால் தனது நோய் நீங்கி விடும் என்று நம்பினார் அக்னி தேவன் அதற்காக கிருஷ்ணர், அர்ஜூனன் உதவியை நாடினார் அக்னி தேவன்.

அக்னி தேவன் வேண்டுதல் ஒருநாள் யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கரையேறும் சமயத்தில் ஓர் அந்தணர் வந்தார். கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து ஒரு வேண்டுகோளை வைத்தார். உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.

அக்னி தேவனுக்கு வந்த நோய் கண்ணனுக்கு அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, அவரை உற்றுப் பார்த்தார். “அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன். தனக்கு ஏற்பட்ட மந்த நோயை பற்றி சொன்னார். நெய் சாப்பிட்டு வந்த நோய் “உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் சாப்பிட்டால் மட்டுமே என் மந்த நோய் தீரும்” என்று கூறி வேண்டினார். நீங்கள் காட்டிற்குள் நுழைவதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சுனன்.

அக்னி தேவனோ, நான் காட்டிற்குள் நுழையும் போதெல்லாம் இந்திர தேவன் மழை பெய்ய வைத்து என்னுடைய முயற்சியை தடுத்து விடுகிறார். எனவே நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அக்னி நட்சத்திர காலம் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று அக்னி தேவனும், கண்ணனும் உதவி செய்ய ஒத்துக்கொண்டனர். அதுவும் எப்படி உங்களுக்கு உதவி செய்ய தனக்கு அம்பும், வில்லும் தேவை என்று வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்ற அக்னிதேவன், சக்தி வாய்ந்த காண்டீப வில், அம்புகளை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டார் அர்ஜூனன். 21 நாட்கள் மட்டுமே இந்த வனத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் அப்போது மழை பெய்யாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினார் கண்ணன். வனத்தை எரித்த அக்னிதேவன் அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க சரக்கூடு ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

21 நாட்கள் எரித்த அக்னி பகவான் அக்னி தேவனும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.அக்னி தேவனுக்கு உதவி செய்யப்போன அர்ஜூனனுக்கு சக்தி வாய்ந்த காண்டீப வில் கிடைத்தது. இந்த வில்தான் குருச்சேத்திர போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மே 4 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலம் வெயில் கொளுத்தப்போகிறது எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும்

அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். இந்நாளில் சுப விசேசங்கள் செய்வதை தவிர்த்து இறைவழிபாட்டில் சிந்தனையை செலுத்த வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.