News
அக்னி நட்சத்திர காலத்தில் மக்களின் நன்மைக்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தின் தோசத்திலிருந்து மக்களை காக்க, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.
கோடைக்காலத்தில் வெயில் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு கோவில் கருவறையும் தப்பாது. பக்தர்களின் நன்மைக்காகவும், இறைவனை குளிர்விக்கவும் வேண்டி பல்வேறு கோவில்களில் தாராபிஷேகம் செய்விப்பது உண்டு.
தாராபிஷேகம் என்பது வெட்டிவேர், கற்பூரம், மூலிகைகள்,ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து ஒரு பாத்திரத்தின்மூலம் மூலவர் மீது சொட்டு சொட்டாக விழும்படி செய்வதே தாராபிஷேகம் எனப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அருணாச்சலேஸ்வரருக்கு தாராபிஷேகம் செய்விக்கப்படும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி (திங்கட்கிழமையான நாளை முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. இந்த தாராபிஷேகம் நாளை முதலே ஆரம்பமாகிறது.
அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு தாராபிஷேகம் நடைபெறும். அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறும்போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிக்கவும் ,எல்லா ஜீவராசிகளின் பாதுகாப்புக்காகவும், கோடையின் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக தாராபிஷேகம் நடைபெறும். கொரோனா தொற்று பரவலை தடுக்க பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. ஆனால், 6 கால பூஜைகளை குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள், புரோகிதர்களை கொண்டு செய்விக்கப்படும். தாராபிஷேக காலத்தில் அண்ணாமலையார் கோவில் நரை திறப்பிலும், 6 கால பூஜை நேரத்திலும் மாறுதல் இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
