அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: வயது வரம்பில் திடீர் மாற்றம்!

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வயதுவரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வயது வரம்பு தற்போது 40 ஆக இருக்கும் நிலையில் அது 45 வயது ஆக மாற்றப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுப் பிரிவினருக்கான மாற்றம் என்றும், மற்ற பிரிவினருக்கு 45 லிருந்து 50ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த உச்ச வரம்பு வயது நியமனம் என்பது அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்றும் அதன் பிறகு அதாவது 2023 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு பொதுப்பிரிவினருக்கு 42 வயது என்றும் இதர பிரிவினருக்கு 47 வயது என மாற்றப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment