அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி! பதறிப்போய் பார்க்கும் சீனா!!

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இதனால் அவரின் பெயராலேயே ஒடிசா மாநிலத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி-5 ஏவுகணையை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.அக்னி-5 ஏவுகணை

இந்த அக்னி 5 ஏவுகணை கடந்த புதன் இரவு 7 .50 மணி அளவில் போர் தந்திரப் படைப்பிரிவினர் ஏவுகணையை செலுத்தி சோதனை  செய்தனர். இந்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தாக காணப்படுகிறது.

அக்கினி-5 ஏவுகணை சென்ற பாதையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூலம் கண்காணித்தனர். இந்தியாவின் வடக்கு, கிழக்கு எல்லைகளில் படை வலிமையை சீனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இரவிலும் ஏவுகணையை செலுத்தும் திறனை சோதித்து பார்ப்பதே இந்த சோதனையின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அக்னி-5 ஏவுகணை உயர் வழிகாட்டு அமைப்பு மூலம் தரையிலிருந்து தரையிலக்கை தாக்கும் திறன் கொண்டது.

ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை அக்கினி பிரைம் வகை ஏவுகணை ஜூன் இருபத்தி எட்டாம் தேதியில் சோதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment