Connect with us

அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு-இரண்டாவது நாளாக விசாரணை!!

admk meeting

தமிழகம்

அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு-இரண்டாவது நாளாக விசாரணை!!

நம் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவின் தலைவர்கள் ஆக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு நிலவி கொண்டு வருகிறது.

மேலும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தலைப்பு வழக்கு தொடுத்திருந்தது. ஆயினும் பதினொன்னாம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இதனால் பன்னீர்செல்வம் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதிய நீதிபதியும் நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய தினமும் வழக்கை விசாரணை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் வழக்கை இன்று காலை 10:30 மணிக்கு மீண்டும் விசாரிக்கிறது உயர் நீதிமன்றம். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில் இரண்டாவது நாளாக நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கை விசாரிக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top