கடந்த சில நாட்களுக்கு முன் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர்களிடம் சாதியை குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய செயலுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவரின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு ’உங்களுடைய ஜாதி என்னமா’ என மீண்டும் கேட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது. இருப்பினும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கல்லூரி நிர்வாகம் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது.
தற்போது நீதியரசர் ராஜூ அனுமதியுடன் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.