Connect with us

பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு-தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

admk meeting

தமிழகம்

பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு-தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

கடந்த இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கின் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணையானது தீர்ப்பு வழங்காமல் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதன்படி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இத்தகைய முடிவு கிடைத்துள்ளதாக காணப்படுகிறது. நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக் வந்தது.

பொதுக்குழு கூட்டம் அதிமுக விதிகளின்படி நடந்தது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் புரிந்தது, ஜூலை 11ஆம் தேதியில் பொதுக்குழு கூட்டம் என ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதால் நிர்வாகிகள் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் எனில் முன்னரே எப்படி காலாவதியானது என்று நீதிபதி மறு கேள்விகளை எழுப்பினார்.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் நீடிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.

தீர்மானம் நிறைவேறவில்லை எனில் இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விகளுக்கு இடமில்லை என்றும் கூறப்பட்டது. இதில் தொலைக்காட்சி, பத்திரிகை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறியது.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா? என்று நீதிபதி கேள்வியை எழுப்பினார் 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியது..

மேலும் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் வாதங்களை எடுத்துரைத்தார். வழக்கு மீதான தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top