மீண்டும் தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்!- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு;

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கும் நிலையில் ஆங்காங்கே லேசான மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் தென் கடலோர மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை கொடுத்தது.

இந்த மஞ்சள் அலார்ட்டின் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கூறியதோடு. அதோடு மட்டுமல்லாமல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்  எச்சரிக்கையை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment