மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் முறை வருமா? நிபுணர்கள் கருத்து!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக இந்தியாவில் 4வது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தற்போதே வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையில் திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப் படுகிறது.

குறிப்பாக சுற்றுலா, தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது எந்தெந்த டிபார்ட்மென்ட் ஊழியர்களை வொர்க் ப்ரம் ஹோம் முறைக்கு மாற்றலாம் என்று திட்டமிட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் இரண்டு அலைகளை போல் பரவ வாய்ப்பில்லை என்றும் இந்தியாவில் உள்ள 90 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இந்தியாவுக்கு பெரிய அளவில் ஆபத்து வராது என்றும் எனவே இப்போதே கொரோனா வொர்க் ப்ரம் ஹோம் முறையை திட்டமிட தேவையில்லை என்றும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.