Connect with us

மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம்-விசாரிக்கும் நீதிபதி..!!

Lockup Death

தமிழகம்

மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம்-விசாரிக்கும் நீதிபதி..!!

நம் தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் டெத் என்று அழைக்கப்படுகின்ற விசாரணை கைதி மரணம் அதிக அளவு நடந்து கொண்டுதான் வருகிறது. இது தொடர்பாக நீதிபதியும் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு டிஜிபி பல அறிவுரைகளை வழங்கினார். அதில் மாலை நேரத்திற்கு மேல் விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த தொடர்பாக நீதிபதி விசாரணையை தொடங்கி உள்ளார். கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

சிசிடிவி பொருத்தப்படாத காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியது ஏன் என கேள்வி எழுப்பினார் புறக்காவல் நிலையத்தில் உள்ள தளங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினரிடம் தனித்தனியே விசாரணை தொடங்கியுள்ளது.

ராஜசேகரின் குடும்பத்தாரிடம் புகார் மனுவை பெற்றார் மாஜிஸ்ட்ரேட் .ராஜசேகரை போலீசார் அடித்து கொன்று விட்டதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

ராஜசேகரின் அடிவயிற்றில் எட்டி உதைத்ததுக்கான தடயம் இருப்பதாகவும், ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top