2020 ஆம் ஆண்டு நம் இந்தியாவில் கொரோனாவின் தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கொரோனாவினால் அண்டை மாநிலங்களுக்கு செல்வது கூட யோசிக்க வேண்டிய நிலைமையில் மாறியது.
எனவே அண்டை மாநிலங்களுடன் உள்ள போக்குவரத்து உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. அவற்றுள் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் மீண்டும் ரயில் போக்குவரத்து சேவையானது தொடங்கப்பட்டது.
ஆயினும் ஒரு சில இடங்களில் இன்றளவும் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்காமலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா காரணமாக 2.5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு-பாலக்காடு ரயில் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் உற்சாகமடைந்து பயணிக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து சேவையின்றி சிரமப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியளிக்கும் தினமாக மாறி உள்ளது.