
தமிழகம்
மீண்டும் சூடு பிடித்த மேகதாது அணை விவகாரம்!!- துரைமுருகன் அறிக்கை;
தற்போதைய தமிழகத்தின் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மேகதாது அணை தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகிறது.
இந்த மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு நீர் வரத்து குறையும் என்று தெரிகிறது. இருப்பினும் கூட கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மக்களின் நலன்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். மக்களின் நலன்களையும், உரிமைகளையும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதியுடன் எடுக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
வரும் 17ம் தேதி நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்ட அறிக்கை விவாதிக்கப் போவதாக பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
