Connect with us

நாளை மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!! மீறினால் கடும் நடவடிக்கை;

பள்ளிகள் விடுமுறை

தமிழகம்

நாளை மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!! மீறினால் கடும் நடவடிக்கை;

தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் அந்த மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இவ்வாறு உள்ள நிலையில் மீண்டும் நாளைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

அதன்படி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை என்று அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி ஏதேனும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கினால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் எச்சரிக்கைகளும் எடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top