மீண்டும் தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்!! இன்று எட்டு மாவட்டங்களுக்கு கனமழை!!

சில நாட்களுக்கு முன்பு நம் தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்திருந்தது. இந்த ரெட் அலர்ட் என்பது அதி கனமழையை குறிக்கும்.

மழை

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் அதிகமாக உள்ளதால் இந்த ரெட் அலர்ட் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சில நாட்கள் முன்பு வழங்கப்பட்டு இருந்தது.

இவை தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டுமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளைய தினம் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மழை

அதுமட்டுமல்லாமல் இன்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment