Connect with us

“மீண்டும் ரெய்டு” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்;

News

“மீண்டும் ரெய்டு” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்;

228a6eaa601cba1e8d9ad0a0577997fd

தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் பத்தாண்டுகளாக நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த ஆட்சியில் மூன்று விதமான முதலமைச்சர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்தார்கள் என்றே கூறலாம். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி வரிசையில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்கு சதவீதத்தில் நல்லதொரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டே வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது சொத்து குவிப்பு வழக்கு அதிகமாக இந்த அதிமுக கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது காணப்பட்டு அவர்களின் பெரும்பாலான பகுதிகளில் சோதனைகள் நடைபெறும்.5f80a3e5468b3c60703272a292ea4164

அதன் வரிசையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீடு வீட்டில் சில நாட்களாகவே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்து வருகின்றனர். இதற்கு அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் வன்மையாகக் கண்டித்தனர் இந்த நிலையிலும் மீண்டும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக மீண்டும் சோதனை நடைபெறுவதாகவும் தகவல் உள்ளது.

அண்ணா நகரைச் சேர்ந்த ரவி என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் ஜூலை 22ல் சோதனை நடந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரெடி இந்தியா நிறுவனத்தில் மீண்டும் சோதனை  நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top