Connect with us

மீண்டும் ஓடிடி ஹீரோவாக மாறும் சூர்யா! சர்ச்சையில் வெளியாகும் வணங்கான் அப்டேட் !

surya vangana

பொழுதுபோக்கு

மீண்டும் ஓடிடி ஹீரோவாக மாறும் சூர்யா! சர்ச்சையில் வெளியாகும் வணங்கான் அப்டேட் !

சூர்யா தனது வெற்றி இயக்குனர் பாலாவுடன் மீண்டும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து தனது 41 வது படத்தில் நடித்துவருகிறார்,இருவரும் இதற்கு முன்பாக நந்தா (2001) மற்றும் பிதாமகன் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து பிரபலமடைந்தார் .பிறகு பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் தெலுங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைப்புகளுடன் வெளியிடப்பட்டது.படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

surya vanakan

பாலா – சூர்யாவின் கூட்டணி தற்போழுது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இயக்குனர் பாலா ‘வணங்கான்’ படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்காத காரணத்தால்தான் படத்தைத் தள்ளி வைத்தார்கள் சூர்யா என்பது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் தற்போழுது ‘வணங்கான்’ படத்திற்கான பாடல் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ‘அப்டேட்’ கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போழுது மாஸான தகவல் வெளியாகியுள்ளது. வணங்ககான் படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடயுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

surya vanakan 1

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியாகி மக்களின் மனதில் நின்று அதிகம் பேசப்பட்ட படங்கள் சூரரைப் போற்று,ஜெய்பீம். இந்த படம் இரண்டுமே திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் மூலம் தான் வெளிவந்தது.அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் நடிகர் சூர்யாவை ஓடிடி ஹீரோ என அழைத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top