ஃபினிஷிங்கில் என்ன மிஞ்ச ஆளே இல்லை என நிரூபித்த தோனி..!! சிஎஸ்கே திரில் வெற்றி;

இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்சுக்கும் மும்பை இந்தியன்ஸ்க்கும் இடையே பலப்பரீட்சை நடைபெற்றது. முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பின்னர் அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிகள் பறிபோனது. இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்த நிலையில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு போட்டி சாதகமாக அமையவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் முதல் பாலிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் வேண்டுமென்று காணப்பட்டிருந்தது.

அப்போதுதான் நம் தல தோனி கடைசி ஓவரில் பேட்டிங் செய்தார். அவரின் அபார பேட்டிங்கால் , ஒரு பந்து 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை மாறியது. இந்த நிலையில் அந்த 4 ரன்களை தல தோனி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment