மார்ச் நாலாம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பல வேட்பாளர்களுக்கு இடையே தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதன்படி நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் பல இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தது. அதேவேளையில் கூட்டணி கட்சிக்கு எதிராக திமுகவின் போட்டி வேட்பாளர்களும் களத்தில் இறங்கி வெற்றி பெற்றனர். இவ்வாறு உள்ள நிலையில் 62 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 62 பதவி இடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
மொத்தமுள்ள இருபத்தியோரு மாநகராட்சிகளில் மேயர் துணை மேயர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதியே மறைமுக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.