Connect with us

அப்புறம் என்ன மீண்டும் ஊரடங்கு தானோ.!! தாறுமாறாக உயர்ந்த கொரோனா;

ஊரடங்கு

தமிழகம்

அப்புறம் என்ன மீண்டும் ஊரடங்கு தானோ.!! தாறுமாறாக உயர்ந்த கொரோனா;

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கட்டுப்பாட்டில் இருந்த ஆட்கொல்லி நோயான கொரோனா தற்போது எல்லை மீறியதாக மாறி உள்ளது. ஏனென்றால் இன்றைய தின பதிவில் புதிதாக 2000 பேருக்கும் அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் 1827 ஆக இருந்த நிலையில் இன்று 2069 ஆக உயர்ந்து உள்ளது.

இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை கடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 33 லிருந்து 11094 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் ஒரு நாள் கூட பாதிப்பு 771லிருந்து 909 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கை கொரோனாவினால் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தோடு காணப்படுகின்றனர். மேலும் மாவட்ட வாரியாகவும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகமாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடப்பட்டது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top