மீண்டும் மறைமுக தேர்தல்…!!! இந்த முறை தவறு நடந்தால் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை!!
தமிழகத்தில் மார்ச் 4ம்தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலானது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இடையேயான தலைவர் பதவிக்காக நடந்தது.
இதில் பல இடங்களில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அங்கு தேர்தல் அதிகாரியால் மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அதன்படி ஆடுதுறை தேர்தலில் சுதந்திரமான அதிகாரியை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான பாதுகாப்பை வழங்க தஞ்சை எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வந்த பிரச்சனையில் ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; மார்ச் 26-ஆம் தேதிக்கு பதில் மார்ச் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையம் கூறியிருந்தது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் காவல்துறையினரும் நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
