
தமிழகம்
மீண்டும் தலைவலியை ஏற்படுத்திய கொரோனா.!! மின்னல் வேகத்தில் பதிவான ஒரு நாள் பாதிப்பு..!!
தற்போது தான் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று மக்கள் என்னும் நிலையில் மீண்டும் மற்றொரு ஏற்படுத்தியுள்ளது கொரோனா பாதிப்பு. ஏனென்றால் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு பதிவாகிக் கொண்டு வருகிறது.
அதுவும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 800 தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இது நேற்றைய தினம் ஒரு நாள் கூட பாதிப்பு 688 ஆக இருந்த நிலையில் இன்று 737 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 3951 இலிருந்து 4360 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 322 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 294 லிருந்து 383 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது தான் அனைத்துக் கம்பெனிகளும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தொழில் துறையும் பாதிப்பினை சந்திக்கலாம் என்றும் தெரிகிறது.
