Connect with us

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மீண்டும் உத்தரவு: எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஒரு வெற்றி

News

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மீண்டும் உத்தரவு: எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஒரு வெற்றி

2965795d2e68368e9df695af021149b3

ஏழை எளிய மக்கள் ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்க நம்பியிருப்பது கூட்டுறவு வங்கி மட்டும்தான். அங்குதான் மிகக்குறைந்த தொகையும் கடன்களாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தனர் இதனை அடுத்து தற்போது ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த உத்தரவு வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து அனைத்து விதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சமீபத்தில் கூட்டுறவு வங்கிகள் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவால் இதுகுறித்து குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top