Entertainment
விவேக்கை அடுத்து ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த கோவை சரளா
தல அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ளதால காமெடி நடிகர் விவேக் நேற்று தனது டுவிட்டர் பக்கம் மூலம் அறிவித்தார். ‘என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் மீண்டும் அவர் அஜித்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விவேக்கை அடுத்து இந்த படத்தில் தற்போது காமெடி நடிகை கோவை சரளாவும் இணைந்துள்ளார். இவர் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருவரும் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிவடைந்த நிலையில் விரைவில் மும்பையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் 40% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் 80% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அஜித், நயன்தாரா, யோகிபாபு, விவேக், கோவைசர்ளா, தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் இசையில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
