Connect with us

விஜய் ரசிகர்களுக்கு அஜித் பதிலடி… ஏகே 61 படத்திற்காக எடுத்த அதிரடி முடிவு…!

Ajith

Entertainment

விஜய் ரசிகர்களுக்கு அஜித் பதிலடி… ஏகே 61 படத்திற்காக எடுத்த அதிரடி முடிவு…!

விஜய் ரசிகர்களுக்கு அஜித் பதிலடி… ஏகே 61 படத்திற்காக எடுத்த அதிரடி முடிவு…!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் போதும், குடும்ப சென்டிமேன்ட், பைக் சேசிங், பைட் சீசன்களுக்காக படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வலிமையின் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த சந்தோஷத்துடன் ஹெச். வினோத், போனி கபூர், அஜித் ஆகியோர் அடுத்து 61 படத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் 9 ம் தேதி ஐதராபாத்தில் ஸ்பெஷல் பூஜையுடன் துவங்க உள்ளது.

இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் அஜித். வில்லன் கேரக்டருக்கான நெகடிவ் இமேஜை சமீபத்தில் போனி கபூரே வெளியிட்டார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், தபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

வலிமை படம் ரீலிஸ் ஆனதில் இருந்தே விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து அஜித்தின் உடல் எடை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஏகே 61 படத்திற்காக அஜித் 10 கிலோ எடையை குறைத்துள்ளாராம். மொத்தம் 25 கிலோ வரை எடையை குறைக்க பிளான் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top