அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்!

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment