2015க்கு அப்புறம் என்னதான் பண்ணிங்க? சென்னைக்கு ஒரு வாரம் டைம் கொடுத்த ஹைகோர்ட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்துக் கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினை போல காணப்படுகிறது.

உயர்நீதிமன்றம்

ஏனென்றால் 2015ஆம் ஆண்டு பெய்த தொடர் கனமழையால் சென்னையில் உள்ள பல வீடுகளில் மழை நீர் ஊருக்குள் மூழ்கியது. இது குறித்து சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் வன்மையான கேள்விகளை கேட்டுள்ளது.

அதன்படி 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் என்று ஹைகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. சென்னையில் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் சந்தித்தது போல தற்போது சென்னை மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராக இல்லையெனில் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் வன்மையாக கூறியுள்ளது.

சாலைகளை அகலப்படுத்த தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்தினை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment