கட்டிப்பிடி சினேகனுக்கு பின் இந்த வாரம் வெளியேர போவது யார் தெரியுமா ?
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேர ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட் . இந்த நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் விக்ரம் படபிடிப்பிற்காக தற்போது விலகுவதாகவும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்க போவதாக கூறி வெளியேறினார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை யார் தொகுத்து வழங்கு வது என்ற கேள்வி எழுந்து வந்தது.
அந்தவகையில் பிரபல வாரிசு நடிகரான சிம்பு கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார். இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபினய், வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, சினேகன் ஆகியோர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் சுருதி, அனிதா சம்பத் இரண்டு பேரில் ஒருவர் இந்த வாரம் வெளியேரப்போவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்துள்ளன.
இதில் அனிதா சம்பத் திருமணமான பெண் போல் நடந்து கொள்ளாமல், ஆண்களிடம் எல்லை மீறி பேச்சு மற்றும் கெட்ட வார்த்தை பயன்படுத்துவதால் இவரது ரசிகர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள். இதனால் இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
