பொங்கலுக்கு மறுநாள்: அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

இந்த மாதம் நாளை 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வரும் 13-ம் தேதி வரை கொடுக்கப்பட உள்ளது.

இந்த குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 16-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசை குறிப்பிட்ட தேதிகளில் பெற முடியாதவர்கள், ஜனவரி 16 ஆம் தேதியிலும் மக்கள் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை சிறப்பாக பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷனில் சிறு தானியம், தேங்காய் எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.