அதிர்ச்சி!! திருமணமான ஆறே மாதம்.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சிவகங்கையில் திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஜெயசீலி என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மாமியார் மற்றும் நாத்தனார் ஜெயசீலிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவருக்கு தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டபோது காலை துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ஜெயசீலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயசீலி தாய் குற்றம்சாட்டிய நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.