பங்குச்சந்தையில் 30 லட்சம் நஷ்டம் ஆனதை அடுத்து அந்த போதையில் இருந்து விடுபட தானாகவே இளைஞர் ஒருவர் கவுன்சிலிங் சென்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை என்பது கிட்டத்தட்ட சூதாட்டம் போன்றது தான் என்றும் பங்குச்சந்தையில் முறையாக அதனை பயின்று வணிகம் செய்தால் மட்டுமே அதில் சம்பாதிக்க முடியும் என்றும் அதிர்ஷ்டவசமாக சம்பாதிக்கலாம் என்று பங்குச்சந்தையில் உள்ளே குதிப்பவர்கள் பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஊரடங்கு நேரத்தில் பங்குச்சந்தையில் பெங்களூரை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது என்றும் லட்சக்கணக்கான பணம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கு சோதனையான காலமாக இருந்து உள்ளது. அவரது கணிப்பு அனைத்துமே பொய்யாகி அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அவர் இதுவரை தான் வாழ்நாளில் சேர்த்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை இழந்தது மட்டுமின்றி குடும்பத்திலும் பிரச்சினை நடந்தது. இனிமேலும் பங்குச்சந்தையில் தொடர்ந்தால் தனது பணம் மட்டும் இன்றி குடும்ப வாழ்க்கையும் சிக்கலாகிவிடும் என்பதை அவர் ஒரு கட்டத்தில் உணர்ந்தார். இதனை அடுத்து அவர் தானாகவே மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் சென்றுள்ளார்.
இதுவரை ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் அடிமையாகி வந்தவர்கள் மட்டுமே அந்த கவுன்சிலிங் அமைப்பிற்கு வந்த நிலையில் முதல் முறையாக பங்குச் சந்தையில் பணத்தை இழந்த ஒருவர் வந்ததை எடுத்து அங்குள்ள மனநல வாழ்த்துவார்கள் ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு அவரிடம் இருந்து அனைத்து விவரங்களையும் கேட்டு அவரது பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொண்டு அவருக்கு தற்போது கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். தற்போது அந்த இளைஞர் படிப்படியாக பங்குச்சந்தையில் இருந்து விடுபட்டு விட்டதாகவும் முழு நேரமாக குடும்பத்தை மட்டுமே கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது