அந்த விஷயத்தில் கவினை முந்திய லாஸ்லியா… வெளியானது அதிரடி அறிவிப்பு!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் என்ன தான் ரசிகர்கள் கவின் – லாஸ்லியா ஜோடியை ரசித்தாலும், கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் தான் டைட்டில் வின்னராக வர வேண்டும் என எண்ணினர். ஆனால் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு பாதியிலேயே வெளியேறினார். சரி, இனி கவினை வெள்ளித்திரையிலாவது பார்க்க வேண்டும் என ஆசையுடன் காத்திருந்தனர். கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் என்ற புதுமுக இயக்குநருடன் ‘ஊர்க்குருவி’ என்ற படத்தில் கவின் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதோடு சரி, அதன் பின்னர் எவ்வித அப்டேட்டும் வரவில்லை. ஆனால் லாஸ்லியா கலர், கலராக போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதோடு அடுத்தடுத்து பட அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஹர்பஜன் சிங் உடன் ‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தில் நடித்து முடித்த லாஸ்லியா, ‘கூகுள் குட்டப்பன்’ ரிலீஸுக்கு தயாராகிவிட்டார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வரும் லாஸ்லியா, தற்போது புதிய படமொன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் “அண்ணபூர்ணி”. லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.

த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment