Entertainment
கமல், ரஜினியை அடுத்து அரசியலில் மோதும் விஜய்-சூர்யா
கோலிவுட் திரையுலகின் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஒரே நேரத்தில் அரசியலில் குதித்துள்ள நிலையில் நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் ஒரே நேரத்தில் அரசியல் களம் காணுகின்றனர். ஆனால் ரஜினி, கமல் நிஜ அரசியலிலும் விஜய், சூர்யா சினிமா அரசியலிலும் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ திரைப்படம் அரசியல் பின்னணி கொண்டது என்பதும் இந்த படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கின்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படமும் அரசியல் படம் என்பதும், இந்த படத்தில் சூர்யாவும் அரசியல்வாதியாக நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா ஏற்கனவே ”ஆயுத எழுத்து’ படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய்யின் சர்கார் மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே. ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
